Traffic diversion : கீழ்ப்பாக்கம் கார்டனில் பாலம் கட்டும் பணி : போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: Construction of Kilpakkam Garden Bridge, Traffic diversion : கீழ்ப்பாக்கம் கார்டனில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் சனிக்கிழமை (நவ.19) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை 2 ஆவது தெருவில் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு சந்திப்பு அருகில் உள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி சார்பாக புதிய பாலம் கட்டுமானப்
பணி தொடங்க உள்ளது.

இதையொட்டி, நவ. 19 ஆம் தேதி (On Nov. 19th)(சனிக்கிழமை) முதல் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனையொட்டி கீழ்ப்பாக்கம் கார்டன் 2 ஆவது சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நியூ ஆவடி சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2 ஆவது சாலை வழியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் , ஆஸ்பிரின் கார்டன் 1 ஆவது தெரு சந்திப்பில் நேராக நியூ ஆவடி சாலை (New Avadi Road) வழியாக செல்லாம்

இதில் ஆஸ்பிரின் கார்டன் முதலாவது தெருவை (Aspirin Garden First Street) நோக்கி இடது புறம் திரும்ப அனுமதியில்லை. கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் இரண்டாவது தெரு வழியாக ஆஸ்பிரின் கார்டன் நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டெய்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து நேரடியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியூ ஆவடி சாலை மற்றும் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு வழியாக செல்லலாம் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.