Low pressure zone : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சென்னை : A new low pressure zone has formed in the Bay of Bengal : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நவம்பர் 20 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இக்காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் (Meteorological Centre) அறிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டு இருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இந்த காற்றழுத் தத்தினால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை, அதிக கன மழை பெய்தது . டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது . தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் (Southeast Bay of Bengal in the adjacent Andaman Sea region) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19, 20, 21 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது (The Tamil Nadu government has advised fishermen not to go to the sea for fishing). ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாது காப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் அனைத்து மண்டல இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் இந்த எச்சரிக்கையை பிறப்பித்திருக்கிறார்.

நவ. 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை (18th to 21st) தமிழக கடலோர பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆகையால் , தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவித்திருக்கிறது.