Competitive examination: மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டித்தேர்வுக்கான பிரத்யேக பயிற்சி

சென்னை: Specialized training for competitive examination of fishing graduates. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த 12..11..2017 அன்று சட்டபேரவையில் அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம்) அறிவித்தன்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித்தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவுசங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ்பயிற்சி பெறவிரும்புவோர் விண்ணப்பபடிவம் (Application Form) மற்றும் அரசுவழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வ ளம் மற்றும் மீனவர்நலத்துறையின் (WWW.fisheries.tn.gov.in) என்ற இணையதளத்தில் (31.10.2022 பிற்பகல் 06.00 மணிவரை) கட்டணமின்றி விண்ண ப்பித்த பிறகு அவர்கள் பெற்றிடும் பதிவுஎண் (Registeration Number) மற்றும் உரிய ஆவணங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மேட்டூர் அணை அலுவலகத்தில் சமர்ப்பிப்பவர்கள் மட்டுமே பயிற்சிக்கான நுழைவுத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், இத்திட்டம் குறித்தகூடுதல் விபரங்களுக்கு கீழ்கண்டமுகவரியில் இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொலைபேசி வாயிலோ (தொலைபேசி எண்.04298- 244045) அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அலுவலக முகவரி மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம். மேட்டூர் அணை பூங்கா, எதிரில், கொளத்தூர் சாலை, மேட்டூர் அணை -636 401.