Change in Chennai city traffic: சென்னை மாநகரின் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: City Police Department informed that the traffic has been changed in Chennai today. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இராயபுரம் M.C ரோடு சாலையில் 30.10.2022 அன்று “Mirchi Fun Street” என்ற நிகழ்வு நடைபெற இருப்பதால் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

N- 1 இராயபுரம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட M.C. ரோடு சாலையில் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று “Mirchi Fun Street” என்ற நிகழ்வு நடைபெற இருப்பதால் சிமெண்டரி சாலை X G.A சாலை R.S.R.M மருத்துவமனை அருகில் உள்ள சந்திப்பு முதல் மேற்கு கல்மண்டபம் சாலை X G.A சாலை சந்திப்பு வரை காலை 6:00 மணி முதல் 09.00 மணிவரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மேற்கண்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

  • G.A சாலை M.C சாலை வழியாக சிமெண்ட்ரி சாலை R.S.R.M மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேற்கு கல்மண்டபம் சாலை மற்றும் M.S. Kovil சாலை வழியாக சிமெண்ட்ரி சாலைக்கு செல்ல வேண்டும்.
  • சிமெண்ட்ரி சாலை X M.C சந்திப்பில் இருந்து G.A சாலை X மேற்கு கல்மண்டபம் சாலை சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் T.H சாலை வழியாகவும் மற்றும் M.S. Kovil சாலை வழியாகவும் செல்லலாம்.
  • மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மற்றும் குடியிருப்பு வாசிகளும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • இவ்வாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.