Committee for Social Justice Policies: சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்த குழு

சென்னை: Committee for Implementation of Social Justice Policies. சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்திட உரிய சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, சட்ட நிபுணர்களையும் மூத்த வழக்குரைஞர்களையும் கொண்ட சட்ட வல்லுநர் குழு ஒன்றினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள்:

  1. அமித் ஆனந்த் திவாரி, மாநில அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர், உச்ச நீதிமன்றம்.
  2. என்.ஆர். இளங்கோ , வழக்குரைஞர்.
  3. அருள் மொழி, வழக்குரைஞர்.
  4. லட்சுமி நாராயணன், வழக்குரைஞர்.
    அரசு அலுவலர்கள்:
  5. பா. கார்த்திகேயன், செயலாளர் (சட்ட விவகாரங்கள்)
  6. ச.கோபி ரவிக்குமார், செயலாளர் (சட்டம் இயற்றல்).
    பிற வல்லுநர்கள்:
  7. முனைவர். சுப. வீரபாண்டியன், தலைவர், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு
    செல்வி. C.N.G. நிறைமதி, வழக்குரைஞர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
    சிறப்பு அழைப்பாளர்:
    டாக்டர். ரவிவர்மா குமார், மூத்த வழக்குரைஞர், பெங்களூரு
    ஆகியோர் இந்தக் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.