Co-operative website re-launched: கூட்டுறவு சங்க தேர்தல் ஆணைய இணையதளம் மீண்டும் துவக்கம்

சென்னை: Co-operative Election Commission website re-launched. தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் (www.coopelection.tn.gov.in) சில தொழில் நுட்ப காரணங்களினால் (Technical Reasons) செயல்படாதிருந்த நிலையில் தற்போது சரிசெய்யப்பட்டு இயங்க தொடங்கியுள்ளது.

ஆணையத்தின் அவ்வலைத்தள பக்கங்களில் காணப்படும் தகவல்கள் மற்றும் விபரங்கள் தற்போது உள்ளபடி (updation) பதிவேற்றம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) வழி, ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்ற விபரம், உரிய பயன்பாட்டிற்காக, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்கட்டுப்பாடு கொண்ட 14 செயற்பதிவாளர்களுக்கும் ஆணைய சுற்றறிக்கை (நகல் இணைப்பு) மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் தொடர்பான ஆணையத்தின் இவ்வலைத்தளப் பக்கத்தினை கூட்டுறவுச் சங்கம் தொடர்புடையவர்களும், கூட்டுறவாளர்களும் மற்றும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.