CMRL Phase 2 Project: சென்னை மெட்ரோ 4ம் வழித்தட சுரங்கம் தோண்டும் இயந்திர சோதனை நிறைவு

சென்னை: Factory Acceptance Testing of Tunnel Excavator for UG01 on Chennai Metro Rail Project Phase 2 Route 4 has been completed. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் UG01க்கான சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவுபெற்றது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு (UG-01 & UG-02) ஒவ்வொன்றிலும் தோராயமாக 4 கி.மீ. நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. மேல் மற்றும் கீழ் சுரங்கங்கள் இரண்டையும் கருத்தில் கொண்டு தோராயமாக 16 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தவுள்ளன.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் M/s ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பயன்படுத்தப்படும் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், பல்வேறு வகையான சுரங்கப்பாதைகளுக்கான சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை தயாரிப்பதில் முன்னோடியான M/s ஹெரென்க்னெக்ட் என்ற புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனையானது சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள HK தொழிற்சாலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் த. அர்ச்சுனன் (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு மற்றும் பொது ஆலோசகர்கள், M/s AEON கன்சோர்டியத்தின் பல்வேறு அலுவலர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக முடிந்தது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பெயர் S1073B, இது 6.670 மீ துளை விட்டம் மற்றும் 110 மீ நீளமுள்ள பூமி அழுத்த சமநிலை இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தின் மொத்த எடை தோராயமாக 700 மெட்ரிக் டன்கள் ஆகும், இது இப்போது மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்தில் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு அதன் இலக்குக்கு கொண்டு செல்லப்படும்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் கலங்கரை விளக்கம் நிலையத்தில் தொடங்கப்பட்டு வருகிறது, மேலும் 2023 மே மாதத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் செலுத்துவதற்கு தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம்-4-ல் பூமிக்கு அடியில் 29 மீ ஆழத்தில் கீழ்நிலையில் தொடங்கப்பட்டு, கலங்கரை விளக்கத்திலிருந்து கட்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் ஆகிய இடங்களில் சுரங்கம் செய்யப்பட்டு இறுதியாக மே 2025 இல் போட் கிளப்பை வந்தடையும்.