Chlorine gas leak at water plant: நீரேற்று நிலையத்தில் குளோரின் வாயு கசிவு; பொதுமக்கள் அவதி

கோவை: A chlorine gas leak occurred at a water station in Ambarampalayam, next to Pollachi, which is used to treat drinking water. பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் நீரேற்று நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தும் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவை ஆழியாற்றின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக அம்பராம்பாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அம்பராம்பாளையம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நீரேற்று நிலையம் உள்ளது. அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், நீரேற்று நிலையத்தில் இருந்த சிலிண்டரில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த ஒரே ஒரு ஊழியர் மட்டும் கசிவை சரிசெய்ய முயன்றும் முடியாததால், ஆனைமலை காவல்துறையினர் உதவியுடன் சரி செய்ய முயன்றனர். அப்போதும் கசிவை சரி செய்ய முடியாததால், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி கசிவை சரி செய்ய முயன்றும் முடியவில்லை.

இதைத் தொடர்ந்து, சுண்ணாம்பு பொடி மூட்டை களை சுற்றிலும் அடுக்கி வைத்து தற்காலிக நிவாரணம் ஏற்படுத்தினர்.
இதில் குளோரின் வாயு கசிவால் சுற்றுப்பகுதியில்இருந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் ஒருவரும், தீயணைப்புத் துறை வீரர்கள் இருவரும் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.