Tirupati Train: சிக்கமகளூரிலிருந்து திருப்பதிக்கு புதிய ரயில் அமைச்சர் சோமனனா துவக்கி வைத்தார்

Chikkamagaluru to Tirupati Train: Minister Somanana inaugurate
Image credit to original source

Tirupati Train: சிக்கமகளூரிலிருந்து திருப்பதிக்கு வாராந்திர ரயில் துவக்க விழா நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக சிக்கமகளூர் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சியை ரயில்வே துறை சார்பாக சிக்கமகளூர் திருப்பதி ரயிலுக்கு பூக்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ரயில் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த நிலையில்

Chikkamagaluru to Tirupati Train: Minister Somanana inaugurate
Image credit to original source

இன்று மத்திய அமைச்சர் சோமன்னா எம்எல்சி சிடி ரவி எம்எல்சி பிரானேஷ் ரயில்வே துறை அதிகாரிகள் எம்எல்ஏ ராஜேகவுடா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோட்டா சீனிவாஸ் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பச்சை கொடி கொடியசைத்து ரயிலை துவக்கி வைத்தனர்

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சோமன்னா பேசுகையில் சிக்கமகளூரில் இருந்து இதுவரை இரண்டு ரயில்கள் மட்டும் இயங்கி வந்த நிலையில் நீண்ட நாட்கள் கனவை நிறைவேற்றும் விதமாக இந்த புதிய ரயில் அமைக்கப்பட்டுள்ளது வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை ஐந்து முப்பது மணிக்கு சிக்கமகளூரில் கிளம்பி மறுநாள் திருப்பதி செல்லும் எனவும் அதேபோல வாரத்தில் வியாழக்கிழமை அன்று ஒன்பது முப்பது மணி அளவில் திருப்பதியில் கிழம்பி சிக்கமகளூருக்கு வந்து அடையும் என அவர் தெரிவித்தார்

Chikkamagaluru to Tirupati Train: Minister Somanana inaugurate
Image credit to original source

கோவில்களில் மிகவும் முக்கியமான கோவிலாக திகழப்படும் திருப்பதிக்கு நேரடியாக ரயில் விடுவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு காரணமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் கோட்டா ஸ்ரீநிவாசுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்

அதே வேளையில் அங்கிருந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் இந்த ரயிலுக்கு தத்தாத்ரியா எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர் இன்னும் ரயிலுக்கு பெயர் வைக்காத நிலையில் தத்தாதிரியா எக்ஸ்பிரஸ் என பெயர் வைப்பதாக உறுதி அளித்தார் ஆனால் ரயில்வேத்துறை என்ன பெயர் வைக்கும் என்பது முடிவாகவில்லை புதிய ரயில் துவக்க விழா நிகழ்ச்சி இது போற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்