Chikkamagaluru: சிக்கமகளூருக்கு வந்த மகளிர் ஆணையர் குழு மாநில தலைவி நாகலட்சுமி சௌத்ரி அவர் சிக்கமளூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றார் அங்கு இருந்த குழந்தைகள் தாய் என அனைவரையும் பார்த்துவிட்டு பின்னர் பாதுகாப்பாக இருக்கும் ஒன் சென்டருக்கு சென்றார் அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் குடும்பச் சண்டை இருந்தவர்கள் அடிதடி சண்டையில் இருந்தவர்களை பார்வையிட்டு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்

அரசு மருத்துவமனையில் தனி அறை உள்ளது இங்கே இருக்கும் பெண்கள் குடும்ப வழக்குகளில் பாலியல் வழக்குகளில் இருப்பவர்கள் ஆவார்கள் முதற்கட்டமாக அவர்கள் போலீஸ் நிலையத்திலிருந்து
பின்னர் இரண்டாம் கட்டமாக இந்த மையத்திற்கு கொண்டு வந்து பாதுகாக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு அடுத்த கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில் மாவட்டத்தில் இந்த ஆண்டு பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு இடையூறு கொடுத்த குற்றம் சிறு வயது திருமணம் உட்பட்ட வகையில் குறைவாகவே நடந்துள்ளது 2019 முதல் 20 ஆம் ஆண்டு வரை 35 பாலியல் பலாத்கார வழக்குகள் பதியப்பட்டிருந்தன 2024 ஆம் ஆண்டு ஐந்து வழக்குகள் பதியப்பட்ட நிலையில் 25 ஆம் ஆண்டு மூன்று வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது அந்த வகையில் பார்க்க போனால் மாவட்டத்தில் சட்டம் பாதுகாப்பாக உள்ளது பாதுகாப்பாக இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளது

ஆகையால் இதற்கு அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதால் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளதால் இது போன்ற குற்றங்கள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார் பின்னர் அங்கிருக்கும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்

அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் குப்பையும் சுத்தம் செய்யாமல் இருந்தது அங்கிருக்கும் சாக்கடை கால்வாய் மற்றும் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு விட்டு உடனடியாக இதை சுத்தம் செய்து நான்கு நாட்களுக்குள் எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அங்கிருந்து அதிகாரிகளுக்கு எச்சரித்தார் அவருடன் தலைமை மருத்துவர் மோகன் குமார் மற்றும் பலர் இருந்தனர்



