Chief Minister M. K. Stalin : சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்

சென்னை: Chief Minister M. K. Stalin hoisting the national flag and delivering a speech at the Chennai Secretariat : சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். இதனையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தையொட்டி திங்கள்கிழமை காலை 9 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். முன்னதாக போர் நினைவு சின்னத்திலிருந்து அவர் காரில் வரும் போது காரின் முன்னாலும், பின்னாலும் மோட்டார் சைக்கிளில் போலீஸார் புடை சூழ அழைத்து வருகின்றனர். ஜார்ஜ் கோட்டையில் (George Fort )அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மேடையின் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து இறங்குவார். அவரை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.

தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவர், தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் (Tamil Nadu, Puducherry Navy Chief Officers), தாம்பரம் விமானப் படை தளத்தின் அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிலால், கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரப்புப்படி முதல்வருக்கு, தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார். பின்னர் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதனையடுத்து தலைமை செயலகத்தின் முன்புறத்தில் உள்ள மேடையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தேசியக் கொடியை முதல்வர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். அப்போதுமூவர்ண‌ பலூன்கள் பறக்க விடப்படும். காவல்துறையினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள். அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்துவார்.

சுதந்திர தின நிகழ்ச்சியையொட்டி, தகைசால் தமிழர் விருது (Thagaisal Tamilar Award), எபிஜே அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருதுகள், மாநில இளைஞர்கள் விருதுகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு முதல்வர் வழங்கி கௌரவிப்பார். அதே போல மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு விருது, சிறந்து விளங்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் விருதுகள் வழங்கி, கௌரவிக்கப்பட உள்ளது.

கர்நாடகம் (Karnataka): முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் உள்ள மானேக்ஷா அணிவகுப்பு திடலில் காலை 9 மணியளவில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பு உரை ஆற்றுகிறார். இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியில் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனையொட்டி, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியை அடுத்து, பெங்களூரில் ட்ரோன், பலூன் உள்ளிட்டவை பறக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர் (The police department has banned the flying of drones and balloons). போக்குவரத்திலும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி லால்பாக் மலர்க் கண்காட்சிக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்பவர்களுக்கு கட்டணச் சலுகையை பெங்களூரு மெட்ரோ ரயில் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல சுதந்திரம் தினம் மற்றும் மாநகர பேருந்து கழகம் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகி உள்ளதற்காக, மாநகர பேருந்துகளில் இன்று பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் இலவச பயணம் மேற்கொள்ளாலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.