Chidambaram Natarajar Temple Therottam: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் வீதி உலா

சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் (Chidambaram Natarajar Temple Therottam) ஆரூத்ரா தரிசன விழா கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதரால் கொடியேற்றி துவக்கி வைக்கப்பட்டது.

இதனையடுத்து தினமும், காலையும், மாலையும் சுவாமி வீதியுலா மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

மேலும் இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதி வந்தடைந்தது. விநாயகர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். அதன்படி கீழரத வீதியிலிருந்து புறப்பட்ட இத்தேர் முறையே தெற்குரத வீதி, மேலரத வீதி, வடக்குரத வீதி வழியாக வலம் வரும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் தேர்த்திருவிழா நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.