Chennai Metro train: சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

சென்னை: Chennai Metro train service temporarily suspended. சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரை மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் போக்குவரத்து சேவையில், சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ இரயில்கள் இயக்குவதில் தற்காலிகமாக சற்று நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விம்கோ நகர் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியிலும், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கி மலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறை சரிபார்த்து கொண்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விரைவில் மெட்ரோ இரயிகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.