New condition for shop Owners: கடை உரிமையாளர்களுக்கு புதிய நிபந்தனை விதித்த சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட (New condition for shop Owners) பகுதிகளில் 73 சதவீதம் கடைகளில் இரண்டு வகையிலான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாமல் இருக்கும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1,18,800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தினமும் 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது. தினமும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அப்படி பிரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க்கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளை எளிதில் தரம் பிரிக்கின்ற வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அப்படி குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாத கடைகளின் உரிமையாளர்களிடம் குப்பைத் தொட்டிகளை உடனடியாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1,18,800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Actress Jacqueline Fernandez : நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜாமீன்

முந்தைய செய்தியை பார்க்க:Red Giant Has Also Bought The Distribution: ஒரு வழியாக வாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்ற ரெட் ஜென்ட்