Chembarambakkam lake: செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 1,000 கன அடியாக உயர்வு

சென்னை: Chembarambakkam lake discharge to rise to 1,000 cubic feet. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததையடுத்து, வட தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, செல்லம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 9 மணிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.