Charitable organizations are advised to register immediately: தொண்டு நிறுவனங்கள், சிறப்புப்பள்ளிகள் உடனடியாக பதிவு செய்ய அறிவுரை

நமாக்கல்: Charitable organizations are advised to register immediately. மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள், மற்றும் சிறப்புப்பள்ளிகள் உடனடியாக பதிவு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் (RPWD ACT) 2016 பிரிவு 51-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி,பயிற்சி, மறுவாழ்வளித்தல் மற்றும் இதர செயல்பாட்டினை அளிப்பதே நிறுவனம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனத்தினை செயல்படுத்துவதற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் RPWD ACT 2016 பிரிவு 51-ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

நலச்சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள், மற்றும் சிறப்புப்பள்ளிகள் தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை) சட்டம் 1973 விதிகள் 1974-ன் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இந்நாளது வரை அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள், மற்றும் சிறப்புப்பள்ளிகள் மேற்படி பதிவினை மேற்கொள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம், அறை எண்:07, மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல்637003 என்ற அலுவலகத்தினை தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி-24-ல் மாநில அரசின் விருது”
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தகுதிகள்: 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் (31 டிசம்பர்-ன் படி) பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்.

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல். சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரினை 15.11.2022 ற்குள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியார் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்விருதுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண் 233, 234 கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல். மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்:04286-299460. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.