Central Minister awareness by cleaning: கோவளம் கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்து மத்திய அமைச்சர் விழிப்புணர்வு

சென்னை: Central Minister awareness by cleaning: கோவளம் கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடற்கரை பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் பிரச்சார விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்” என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தும் விதமாக கோவளம் கடற்கரையில் இன்று காலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிஜேந்திர சிங் தலைமையில் கடற்கரைப் பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடற்கரையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவலால் ஈர்க்கப்பட்டு இல்லம்தோறும் தேசியக் கொடி ஏற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்க கோவளம் கடற்கரைப் பகுதிக்கு வந்ததாக தெரிவித்த அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தியதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், அறிவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக “சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்” என்ற பிரச்சாரத்தின் வாயிலாக கோவளம் கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து மீனவ மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக கூறிய அமைச்சர், 75 ஆவது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக இல்லம்தோறும் தேசியக் கொடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக நாடு முழுவதும் நாம் நமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் எனவும், அதனைப் போற்றும் விதமாக கோவளம் கடற்கரையில் தேசியக் கொடியினை ஏற்றி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 75 நாட்கள் நடைபெற உள்ள இந்த இயக்கம் தமிழகத்தில் உள்ள எட்டு கடற்கரை பகுதிகளை உள்ளடக்கி 75 கடற்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட உள்ளது. நடப்பாண்டு ஜூலை ஐந்தாம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நிறைவுற இருக்கிறது.

பொறுப்புடன் நுகர்வோம், கழிவுகளை வீட்டிலேயே பிரித்து பொறுப்புணர்வுடன் அவற்றை அப்புறப்படுத்துவோம் என்ற மூன்று குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இந்த இயக்கம் பொதுமக்களால் நடத்தப்பட உள்ளது.

தெரிந்துகொள்வோம்:
கோவலம் என்பது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மீனவ கிராமமாகும். இது சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர் தெற்கில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ளது. கோவலத்தை ஒரு துறைமுக நகராக ஆற்காடு நவாப் சாதித் அலி உருவாக்கினார். இது 1746ம் ஆண்டில் பிரஞ்ச்சுக்கார்களால் கைப்பற்றப்பட்டு, பின் 1752ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.

காலனி ஆதிக்கக் காலத்தில் டச்சுக்காரர்களால் இங்கு ஒரு கோட்டை கட்டப்பட்டது. தற்காலத்தில் இங்கு ஒரு தனியார் ஆடம்பர கடற்கரை விடுதி ஃபிஷர்மேன்ஸ் கோவ் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்கரையில் உள்ள பண்டைய கத்தோலிக்க தேவாலயம் கவனத்தைக் கவரக்கூடியது. மேலும் இங்கு கடற்கரை அருகில் ஒரு தர்கா, கோயில் ஆகியன உள்ளன.

கோவளம் கடற்கரை கிராமம் மீன்பிடி தொழிலுக்குப் பிரபலமானது. இதனால் இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, இது இந்தியாவின் முதல் நீர்சறுக்கு கிராமமாகும். இங்கு நீர்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகள் நடக்கின்றன. இங்கு நீர்சறுக்கு போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.

கோவளம் கடற்கரை கிழக்குக் கடற்கரையில் காற்று நீர்சறுக்கு உள்ள ஒரு சில இடங்களில் ஒன்று ஆகும். கடற்கரையில் நீர்சறுக்குப் பள்ளியுடன் கூடிய விடுதி உள்ளது.