Karthi chidambaram: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

karti chidambaram
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ

Karthi chidambaram: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது

இந்நிலையில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் மதியம் 3 மணியளவில் சோதனை நிறைவடைந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் சிபிஐ ரெய்டு முடிவடைந்துள்ள நிலையில் கார்த்தி சிதம்பரம் மீதான முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் கார்ததி சிதம்பரத்தின் பெயர் இரண்டாவது நபராக சேர்க்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக பாஸ்கர ராமனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் பரிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Actor siddharth: புதிய தொழில் தொடங்கும் சித்தார்த்