Breakfast program in Tamil Nadu : தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்

சென்னை: Breakfast program in government primary schools in Tamil Nadu : தமிழகத்தில் உள்ள 1,545 அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்த அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் (government primary schools) கல்வி பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ரூ. 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த அரசு ஆணையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இட்டார். இந்த தகவலை அவர் இன்று நடந்த மாணவர்களுக்கான மனநலன் குறித்த விழிப்புணர்வு வாகன தொடக்க விழாவில் பேசும் போது தெரிவித்தார்.

முதல் கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ரூ. 33.56 கோடி (Rs. 33.56 crore) செலவில் வழங்கப்படும் என்றும், முதல்வரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் அனைத்து பள்ளி வேலை நாள்களில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை காலை ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வியாழக்கிழமை அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை உப்புமா, வெள்ளிக்கிழமை வா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி மற்றும் ரவா கேசரி, சேமியா கேசரி வாரத்தில் குறைந்தது 2 நாள் உள்ளூர் சிறுதானியங்களை கொண்டு காலை சிற்றுண்டி சமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிற்றுண்டி தயாரிப்பதற்கான வழிமுறைகளும், இந்திய தர நிர்ணயக்கழக (Indian Standards Institution) நெறிமுறைகளின்படி மூலப்பொருள்களின் தரம் இருக்க வேண்டும் என வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மூலப்பொருள்கள் இயல்பான மணம், நிறம் உடையதாகவும் வேறு வெளிப்பொருள்கள் கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மசாலப் பொருள்கள் தரமாக இருக்க வேண்டும். காய்கறிகளை சமைக்கும் முன், நன்கு கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

சமைத்த உணவுகளை குழந்தைகளுக்கு முன் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் அதை சுவைத்து (Must taste) பார்க்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அடிக்கடி பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். உணவின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாகவும், உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர் சுத்தத்தை பராமரிக்க வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் வகுப்பறைக்கு பசியின்றி, வருவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.