Death Student Body handed over to parents : மாணவி ஸ்ரீநிதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு: சொந்த கிராமத்தில் இறுதிச் சடங்கு

கள்ளக்குறிச்சி: Kallakurichi District Student Srinidhi : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 12ம் தேதி மர்மமான முறையில் பிளாஸ் 2 மாணவி ஸ்ரீநிதி உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வந்த நிலையில், கடந்த 17ம் தேதி பள்ளி வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் (In court) நடைபெற்ற வழக்கு விசாரணையில் மாணவியில் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. உத்தரவை தொடர்ந்து சனிக்கிழமை காலை மாணவியில் தாய்செல்வி, தந்தை ராமலிங்கம் ஆகியோரிடம் மாணவியில் உடல் ஒப்படைக்கப்பட்டது (Hand over the body to the student). மாணவியில் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது.

Image Credit : Twitter.

முன்னதாக கள்ளக்குறிச்சி அரசுக்கு மருத்துமனைக்கு மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் சி.வி.கணேசன் (Minister CV Ganesan), எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் வருகை புரிந்திருந்தனர்.

இதனையொட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் 500க்கும் அதிகமான போலீஸார் (More than 500 policemen) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாணவியில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேப்பூர் பெரியநெசலூர் உள்ளூர் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளியூரிலிருந்து செல்பவர்களுக்கு அனுமதி இல்லை. மாணவின் உடலை கொண்டு செல்வதையொட்டி திருச்சி- சென்னை நெடுஞ்சாலையிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பெரியநெசலூர் கிராமமும் (Perianesalur village) போலீஸார் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கிராமத்தில் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.