Life imprisonment : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: Life imprisonment 5 members in one family : கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள நாலாட்டின்புதூர் இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் 40 வயது ராஜேந்திரன் (40 year old Rajendran). இவரது மனைவி பாண்டியம்மாள். இதே பகுதியைச் சேர்ந்தவர் கணபதி.

பாண்டியம்மாளுக்கும், கணபதியின் மனைவி கருப்பாயிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்டத்தில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜேந்திரனை, கணபதி, கருப்பாயி, இவர்களது மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகியோர் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை (murder) செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு தூத்துகுடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிலிப் நிக்கோலஸ் (Judge Philip Nicholas) விசாரித்து வந்தார். வழக்கு தொடர்பான தீர்த்து நேற்று கூறப்பட்டது.

இதில் கணபதி, அவரது மனைவி கருப்பாயி, மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகியோருக்கு 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு (5 family members) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழாய்யடிச் சண்டை கொலை வழக்கு வரை கொண்டு போகும் என்பதற்கும், அதனால் குடும்பத்திற்கு ஆயுள் தண்டனை (Life sentence) கிடைக்கும் என்பதற்கும் இது ஒரு உதாரணமாக உள்ளது.