BIS Certification essential for adventure tourism: சாகச சுற்றுலாவிற்கான தரச்சான்று இன்றியமையாதது: தமிழக சுற்றுலா துறை ஆணையர்

சென்னை: Certification essential for adventure tourism: சாகச சுற்றுலாவிற்கு தரச் சான்றிதழ் பெறுவது இன்றியமையாத ஒன்றாகும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னை சவேரா ஹோட்டலில் இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் பிரஷர் குக்கர்களுக்கான இந்திய தர நிர்ணய சான்றிதழ் குறித்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, வீட்டு பயன்பாடு முதல் வணிக பயன்பாடு வரை அனைத்து பொருட்களுக்கும் தரச் சான்றிதழ் பெறுவது முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.

இது போன்ற உரையாடல் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்பட பலதரபட்ட பிரிவினரிடம் இருந்து பெறும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தரச் சான்றிதழை மேம்படுத்த உதவும். தரச் சான்றிதழ் என்பது காலத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ப மாறி வருவதாக கூறினார்.

சாகச சுற்றுலாவிற்கு தரச் சான்றிதழ் பெறுவதன் மூலம் ஆபத்தை குறைத்து, பல்வேறு சுற்றுலா சந்தையை ஈர்க்க முடியும் என கூறிய அவர், பொருட்களுக்கு மட்டுமல்லாது சேவைகளுக்கும் இந்திய தர நிர்ணய அமைவனம் தரச்சான்று வழங்குவது பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை தலைமை இயக்குனர் (தென் மண்டலம்) யூ.எஸ்.பி. யாதவ், சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.