President of India greetings: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்து

புதுடெல்லி: The President of India, Smt. Droupadi Murmu has sent her greetings to all fellow citizens on the eve of Ganesh Chaturthi. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 31ம் தேதி) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்துக்கள் அனைவரும் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான், விக்னஹர்தராகவும், மங்கலமூர்த்தியாகவும் கருதப்படுகிறார். இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, நான் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறிவு மற்றும் செழுமையின் கடவுளான விநாயகர் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தில் முழு முதல் கடவுளாக ஒவ்வொரு பக்தர்களாலும் விநாயகர் போற்றப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சாதி, நம்பிக்கை, மதம் அல்லது பிராந்திய எல்லைகளைக் கடந்து, இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இந்நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வளமையுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.