Biryani shops ordered to close for 2 days: காஞ்சிபுரத்தில் 2 நாட்கள் பிரியாணி கடைகளை மூட உத்தரவு

காஞ்சிபுரம்: Biryani shops ordered to close for 2 days in Kancheepuram:காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2 நாட்களுக்கு பிரியாணி கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கும், ஊர்வலத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தடை விலக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் அனுமதிக்கும் நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் என்று அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சிவகாஞ்சி நிலையம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயல்முறை ஆணை என்ற பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பு தற்போது பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைகளுக்குப் பட்ட செங்கழுநரோடை பதி சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகின்ற 31.08.2012 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதனைத்தொடர்ந்து 02.09.2022 மற்றும் 04.09.2022 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளதால் செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை செப்டம்பர் 2 மற்றும் 4ம் தேதிகளில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி தங்களது கடையை முடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடை உரிமையாளர்களை காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகள் மூடப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்த உத்தரவு தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.