JEE Advanced 2022 Tomorrow : நாளை ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு 2022 தேர்வு : தேர்வுக்கு முன் இதை மனதில் கொள்ளுங்கள்

மும்பை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 தேர்வு இரண்டு ஷிப்ட்களில் நடைபெறுகிறது. அதாவது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2 ஆம் தாளுக்கான தேர்வும் நடைபெறும்.

மும்பை: இந்திய தொழில்நுட்பக் கழகம் (JEE Advanced 2022 Exam tomorrow) ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 தேர்வை நாளை ஆகஸ்ட் 28, 2022 அன்று நடத்துகிறது. jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 23 அன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வை எழுதும் மாணவர்கள் தங்களின் நுழைவு அட்டையை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

நுழைவு அட்டையை (Admission Card) ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இன்று நுழைவு அட்டையைப் பதிவிறக்குவதற்கான கடைசித் தேதியாகும். ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு வெற்றிகரமாக பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், நீங்கள் ஏற்கனவே நுழைவு அட்டையை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், உடனடியாக நுழைவு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மும்பை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute of Technology), ஜேஇஇ அட்வான்ஸ்டு 2022 தேர்வு இரண்டு ஷிப்ட்களில் நடைபெறுகிறது. அதாவது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2 ஆம் தாளுக்கான தேர்வும் நடைபெறும். ஜேஇஇ அட்வான்ஸ்டு பதிவு ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் தொடங்கியது. பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 12 ஆம் தேதி மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 13 ஆம் தேதியாகும்.

தேர்தலில் பங்கேற்பவர்கள் அனுமதி அட்டையை எடுத்துச் செல்வது அவசியம் என்பதை அனைத்து விண்ணப்பித்த மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும் இல்லையெனில் நீங்கள் தேர்வில் கலந்து கொள்ள‌ அனுமதி வழங்கப்பட மாட்டாது. தேர்வின் போது, ​​விண்ணப்பித்த மாணவர்கள் வினாத்தாளின் அனைத்து முக்கிய வழிகாட்டுதல்களையும் (All important guidelines of the question paper) படித்துவிட்டு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

தேர்வுக்கூடத்திற்குள் செல்போன், டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள், புளூடூத் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை தவிர, தேர்வர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் பிற பேனா பென்சில்களை தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் புதுப்பிப்புகளுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.