Biryani Eating contest: ஈரோடு அருகே பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர் அசத்தல்

ஈரோடு: A young man is amazing in a biryani eating contest near Erode. கோபிசெட்டிபாளையத்தில் 2 கிலோ பிரியாணியை 18 நிமிடத்தில் சாப்பிட்ட இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வைரகிரீடம் அரிசி மண்டியின் சார்பில் பிரியாணி சாப்பிடும் போட்டி இன்று நடைபெற்றது. பிரியாணி சாப்பிடும் பந்தயத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் 2 கிலோ பிரியாணியை 18.18 நிமிடத்தில் சாப்பிட்டு 3 ஆயிரம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடந்த 1984ம் ஆண்டு முதல் முன்சீப் கோர் எதிரில் வைரகிரீடம் அரிசி மண்டி செயல்பட்டு வருகிறது. இந்த வைரகிரீடம் அரிசி மண்டி நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தி வருகிறது.

கோபிசெட்டிபாளையம் முன்சீப் கோர்ட் எதிரே உள்ள அரங்கத்தில் இந்த பிரியாணி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் மொத்தம் 170 பேர் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தலா 2 கிலோ பிரியாணியுடன் தயிர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் கலந்துகொண்ட மொத்தம் 170 பேரில் 25க்கும் மேற்பட்ட பெண்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடங்கிய முதல் பத்து நிமிடத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் வேகமாக சாப்பிட்டு வெற்றிக்கோட்டை நெருங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதத்தில் பாபு என்ற இளைஞர் 18.18 நிமிடங்களில் 2 கிலோ பிரியாணியை முழுமையாக சாப்பிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து மற்ற போட்டியாளர்கள் அத்துடன் சாப்பிடுவதை நிறுத்தி மிகுதியாக இருந்த பிரியாணியை பக்கெட்டில் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர். இதில் வெற்றி பாபு என்பவருக்கு வைரகிரீரடம் அரிசிமண்டி நிறுவனர் 3 ஆயிரம் பரித்தொகையினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வைரகிரீடம் ராஜா மற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.