Qatar : பிறந்தநாள் அன்று பள்ளி பேருந்தில் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

Girl is found mysteriously dead : முதற்கட்ட விசாரணையில் வெயிலின் தாக்கத்தால் சிறுமி இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது

கத்தார்: Girl is found mysteriously dead on the school bus on her birthday: கத்தாரில் நான்கு வயது சிறுமி தனது பிறந்தநாளில் இறந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. பள்ளி பேருந்தில் உஷ்ண தாக்கத்தினால் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சிறுமி ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியின் கேஜி-1 மாணவி மின்ஜா மரியம் ஜேக்கப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமி, வெளிநாடு வாழ் இந்தியர்களான அபிலாஷ் சாக்கோ மற்றும் சௌமியா ஆகியோரின் இளைய மகள் மின்ஜா மரியம் ஜேக்கப் என்பது தெரிய வந்துள்ளது.

என்ன நடந்தது
பிறந்த நாளைக் கொண்டாடிய நான்கு வயது சிறுமி மின்ஜா மரியம் ஜேக்கப் (The four-year-old girl is Minja Mariam Jacob) பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளிப் பேருந்து, பள்ளியை அடைந்த பிறகும் பேருந்தில் இருந்து சிறுமி இறங்கவில்லை. பள்ளி பேருந்தில் சிறுமி மயங்கியோ அல்லது தூங்கிக் கொண்டோ இருந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து ஊழியர்களும் இதை கண்டுகொள்ளாமல் பேருந்தைப் பூட்டி விட்டு சென்றுள்ள‌னர். பள்ளி மைதானத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே சிறுமி எழுந்து, பேருந்தில் இருந்து வெளியேற முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் கதவு பூட்டப்பட்டதால் பேருந்தில் இருந்து வெளியே வர முடியாததால். அதிக வெயிலால் அவதிப்பட்ட சிறுமி பேருந்திலேயே மயங்கி விழுந்துள்ளார் (The girl fainted in the bus). நண்பகலில் பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து ஊழியர்கள் வந்து பார்த்தப் போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் வெயிலின் தாக்கத்தால் சிறுமி இறந்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள கத்தார் கல்வித்துறை (Qatar Education Department expressed regret), இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.