DGP Sylendra Babu : போதைப் பொருள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: Arrest under gunda’s act for selling drugs : போதைப் பொருள் விற்பனயை தொடர்ந்து செய்தால், அது போன்றவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய‌ டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதையடுத்து, அதனை தடுக்கும் வகையில், போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள், கடத்தலில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை (Action against drug dealers and traffickers) எடுக்கும் வகையில் போதைப் பொருள்களினால் ஏற்படு தீமைகள் குறித்து, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு, என்ற திட்டத்தை கடந்த ஆக. 10 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மையிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறையின் டிஜிபி சைலேந்திரபாபு கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள் (Zonal IGs), சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் சைலேந்திர பாபு பேசியது: மாநிலம் முழுவதும் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான போதைப் பொருள்கள் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுகின்றன. இதனைத் தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். கடல் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதனையும் ரோந்து படகுகள் மூலம் கண்காணிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் அருகே போதைப் பொருள்களின் நடமாட்டம் உள்ளதா என்பதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் (gunda’s act) கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தங்களது பெயரிலும், பினாமி பெயரிலும் வாங்கி உள்ள சொத்துகளை அடையாளம் கண்டு, பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களது வங்கிக் கணக்குகளையும் முடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் விரைவில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சைபர் குற்றப்பிரிவும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சென்னையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பெருமாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிலால் (Commissioner of Police Shankar Jilal), சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக் கண்ணன், ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ராத்தோர், தாம்பரம் மாநகராட்சி காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.