Heavy Rain : கர்நாடகத்தில் பரவலாக‌ மழை: சிக்கமகளூரில் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை

சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள என்.ஆர்.புரா, கொப்பா, சிருங்கேரி, கலசா, முடிகெரே, சிக்கமகளூரு தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, சிக்கமகளூரு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு : Heavy Rain in karnataka : அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக‌ கர்நாடகத்தில் பரவலாக‌ மழை பெய்து வருவதால் சிக்கமகளூரு மாவட்டத்தில் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் கடலோரம் மற்றும் மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரபிக் கடல் மற்றும் ஒடிசாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 4 நாட்களுக்கு கர்நாடகாவில் கனமழை பெய்யும். இந்நிலையில், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் உள்ள 6 வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடல் மற்றும் ஒடிசாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பெரிய அளவில் பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் சிகப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்மகளூர், ஹாசன், ஷிமோகா மற்றும் குடகு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள என்.ஆர்.புரா, கொப்பா, சிருங்கேரி, கலசா, முடிகெரே, சிக்கமகளூரு தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, சிக்கமகளூரு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், மலைப்பகுதிகளில் மழை பெய்து, பேரழிவை உருவாக்கியுள்ளது.

கடலோர மற்றும் மலை மாவட்டங்கள் மட்டுமின்றி பெல்காம், ஹாவேரி, பீதர், கலபுர்கி, தார்வாட் ஆகிய மாவட்டங்களிலும் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், பெங்களூரு உள்ளிட்ட மலைப்பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பாதிப்பை தடுக்க‌ தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ள‌து.

உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த சனிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த 3 மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தவிர, மழையால் பள்ளிகள் மற்றும் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து மாவட்ட‌ நிர்வாகங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மழை வெள்ள பாதிப்பு அதிகம் உள்ளதால் சிக்கமகளூரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.