Appointment order for candidates selected by TNPSC: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணை

சென்னை: Appointment order for candidates selected by TNPSC: நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் சார்நிலைப்பணிகள் தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read: Tn Cm inaugurate Police quarters: ரூ.186.51 கோடி மதிப்பிலான காவலர் குடியிருப்புகளை தமிழக முதல்வர் திறந்து வைப்பு

அதேபோல், பொதுப்பணித் துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலர் (சிவில்) பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

பொதுப்பணித் துறையில் 144 இளநிலை வரை தொழில் அலுவலர் (சிவில்) பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணித் தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
Also Read: Increase in water flow to Mettur dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு. பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மரு. க.மணிவாசன். பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேருந்து விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி:
நேற்று பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்- ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமுற்று, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாயும், ஆகமொத்தம் மூன்று இலட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதல்வர் ஆணையிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்.