Sub-Inspector Posts in Puducherry : புதுச்சேரி மாநில காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: Applications are invited for Sub-Inspector Posts in Puducherry State Police : புதுச்சேரி மாநில காவல்துறையில் காலியாக உள்ள 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான (60 Sub-Inspector posts) தேர்வுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி குபேர சிவக் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி காலியாக உள்ள 60 சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆண்டு 390 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இந்த நிலையில் தற்போது 60 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் புதிதாக நிரப்பப்பட உள்ளன . இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் (Apply online). அடுத்த மாதம் (டிசம்பர்) 9 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். 60 பணியிடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 19 இடங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

20 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் (3 years for backward, SC, ST. Age relaxation of 5 years will also be given to the category). உடல் தகுதி தேர்வும், எழுத்து தேர்வும் நடைபெறும் . இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சி வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: Police.py.gov.in