HD Kumaraswamy : சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்ட பிறகு மின் கட்டணமும் உயர்ந்தப்பட்டுள்ளது ஏன் ? : எச்.டி.குமாரசாமி கேள்வி

பெங்களூரு: After the adjournment of the legislative session, why has the electricity bill increased? : சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மின் கட்டணமும் உயர்ந்தப்பட்டுள்ளது ஏன் ? என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, நவராத்திரி பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அரசு, மக்களுக்கு மின் கட்டண உயர்வு (Electricity tariff increase) என்ற மின்சாரத்தைப் பாய்ச்சி, அதிர்ச்சி அளித்துள்ளது. மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு 24 லிருந்து 43 பைசாவாக உயர்த்தப்பட்டிருப்பது அறிவியல் பூர்வமற்றது, விரும்பத்தகாதது, கண்டிக்கத்தக்கது. மின் கழங்கங்களுக்கு ஆதாரவாக, மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு சூடு போட்ட அரசு. தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

நிலக்கரியின் விலை உயர்வால் 5 சதம் சுங்க வரி அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணத்தை உயர்த்துவதில் த‌ங்களுக்கு உடன்பாடில்லை என்றாலும், வேறு வழி இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம் என மின் துறை அமைச்சர் கூறி உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன. மின் உற்பத்தி நன்றாக உள்ளது (Power generation is good). ஆனால், கொள் முதல் விலை ரூ.1,244 கோடி. அதிகரித்துள்ளதற்கு காரணம் என்ன? மின் துறையில் சிலரின் நலன்களைப் பாதுகாக்க எஸ்காம்களின் தோள்களில் பாரம் ஏற்றப்பட்டு, மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது.

மாநில பாஜக அரசு மக்கள் பக்கம் இல்லை என்பது உண்மைதான். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தாலும், நாட்டில் எண்ணெய் விலையை குறைக்காத மத்திய அரசின் பாதையை மாநில அரசும் பின்பற்றி வருகிறது. தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்படுவதில் சந்தேகம் எழுகிறது. மின் கசிவு, திருட்டை தடுக்க முடியாமல், புதுமையான தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. ஏழைகளிடமிருந்து வசூலித்து, பெரும் வணிகர்களின் பாக்கெட்டை நிரப்புவது பாஜகவின் தத்துவம் (BJP’s philosophy is to collect money from the poor and fill the pockets of big businessmen). கர்நாடகத்திலும் அதையே செய்கிறது பாஜக என்றார் குமாரசாமி.