Aavin Milk Booth : ஆதி திராவிட, பழங்குடியின தொழில் முனைவோர் மானியத்துடன் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

சென்னை : ஆதி திராவிட, பழங்குடியின தொழில்முனைவோர் மானியத்துடன் ஆவின் பாலகம் (Aavin Milk Booth) அமைக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

2022-2023 ஆண்டுக்கான ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, ஆதி திராவிடர், பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் (Aavin Milk Booth) அமைக்க விண்ணப்பிக்கலாம். தாட்கோ மூலம் மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ரூ. 3 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீத மானியமாக ரூ. 90,000 வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க ஆவின் நிறுவனத்துடனான ஒப்பந்த நகல், வருவாய் சான்றிதழ் (ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும்), ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள‌ அட்டை, விலைப்புள்ளி எண்ணுடன் GSTIN அறிக்கை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கல்வித் தகுதி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களுடன் ஆதி. திராவிடர் இனத்தவராக இருப்பின்
http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் பழங்குடியினராக http://fast.tahdco.com இணை யதளத்திலும் பதிவு செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் (Annual revenue Should be within Rs.3 lakhs). கூடுதல் தகவல்கள் சென்னை மாவட்ட அலுவலகத்தின் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்திலோ 044-5246344 94450 பெற ஆட்சியர் இரண்டாம் 29456 என்ற எண்களுக்கோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.