Amarnath yatra : அமர்நாத் யாத்திரைக்கு சென்று சிக்கிக் கொண்டுள்ள கன்னடர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை: முதல்வர் பசவராஜ்பொம்மை

CM Basavaraj bommai : அமர்நாத்தில் சிக்கி உள்ள கன்னடர்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம். இது தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.

பெங்களூரு : Amarnath yatra : அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோயில் அருகே வெள்ளிக்கிழமை மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. அமர்நாத் யாத்திரைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கன்னடர்கள் சென்றுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிற‌து.

அமர்நாத்தில் சிக்கி உள்ள கன்னடர்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறோம். இது தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக, மேக வெடிப்பினால் கன்னடர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

அமர்நாத்தில் சிக்கித் தவிக்கும் கன்னடர்களை மீட்பதற்காக மாநில அரசால் இன்று உதவி தொலைப்பேசி இணைப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கப்பட்ட சிறிது நேரத்திற்கு இந்த உதவி தொலைப்பேசி இணைப்புக்கு நிறைய அழைப்புகள் வந்துள்ளன. அவர்கள் அனைவரையும் பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பு. தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காஷ்மீர் போலீஸ், திபெத் படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சிக்கித் தவிப்பவர்கள் இருப்பவர்கள் மாநில அரசு அறிவித்துள்ள‌ உதவி தொலைப்பேசி இணைப்பு எண்ணில் அழைக்கவும். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து அவர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) – 011-23438252 அல்லது 011-23438253, காஷ்மீர் பிரிவு உதவி எண் – 0914-2496240, கோவில் உதவி எண் – 0194-2313149 மற்றும் கர்நாடகா மாநில அவசரகால செயல்பாட்டு மையம் – 080-1070 அல்லது 223406 எண்ணில் மீட்பதற்கு உதவி தேவைப்படும் யார் வேண்டுமானாலும் அணுகலாம்.