Chief Minister M.K.Stalin : காந்தியடிகளின் கூற்றிற்கு ஏற்ப முற்போக்குச் சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Image Credit: Twitter.

திண்டுகல்: According to the statement of Gandhiji, Tamil society should be built as a scientific society with progressive thinking: Chief Minister M.K.Stalin : திண்டுக்கலில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 36 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியது: குஜராத்தில் பிறந்து, ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்தியாவின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தியடிகள் தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இட்டவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர்.

இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்தத் தமிழ் மண். வட இந்தியாவினர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும் (Everyone from North India should learn a South Indian language). அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் வருக வருக என வரவேற்கிறேன். சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் கூற்றிற்கு ஏற்ப முற்போக்குச் சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன்.

உண்மை,  ஒழுக்கம், வாக்கு தவறாமை, அனைவருக்கும் சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகாரக் குவியலை எதிர்த்தல்  போன்றவை காந்தியத்தின் அடிப்படைகள். இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள்! இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாக காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம் (Let us qualify ourselves to say Gandhi’s name).

இந்த பெருமைமிகு விழாவில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெரு மகிழ்ச்சிக்குரியதாகும். இசைஞானி என்ற பெருமைமிகு பட்டத்தை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இசை உலகத்தின் மாமேதையான இளையராஜாவிற்கு (Ilayaraja, the godfather of the music world) வழங்கினார். அவர்களையும், மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் அவர்களையும், பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவரையும் வாழ்த்துகிறேன். காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக பரப்புரை செய்பவர்களாக நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாயம் மாணவர்கள் இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள் என்றார்.