Abhisheka fee has been increase in Tiruthani Murugan temple: திருத்தணி முருகன் கோயிலில் 9 ஆண்டுகளுக்குப்பின் அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த முடிவு

திருவள்ளூர்: After 9 years in Tiruthani Murugan temple, the abhishekam service fee has been increased. திருத்தணி முருகன் கோயிலில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் ஐந்தாம் ப்டை வீடாக போற்றப்படுகிறது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழப்பட்டு செல்கின்றனர்.

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மூலவருக்கு பஞ்சாமிருதம், சந்தனகாப்பு, தங்க, வெள்ளி கிரீடம் அணிவித்தல், உற்சவர் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத்தேர் உட்பட பல்வேறு சேவைகளுக்கு அதற்கான கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்கேற்று வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த கோவிலின் சேவைகளில் கட்டணங்கள் மாற்றமின்றி 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்தநியையில், அபிஷேக பூஜைக்கு பயன்ப்படுத்தப்படும் மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்து திருக்கோயிலுக்கு கூடுதல் பாரம் ஏற்படுவதால், அபிஷேக சேவை கட்டணத்தை உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டணம் உயர்வுக்கு பக்தர்களிடமிருந்து கருத்துக்களை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 25ம் தேதி வரை பொதுமக்கள் அபிஷேகம் சேவைக் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக ஆலோசனைகள், ஆட்சேபனை தொடர்பாக திருக்கோயில் பிரதான அலுவலகத்தில் கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாக வழங்கலாம். ஆன்லைன் மூலம் கருத்து தெரிவிக்க [email protected] என்ற இணையதளத்தின் வாயிலாககவும் தெரிவிக்கலாம் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.