Attack on Tasmac employees: கடன் கொடுக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல்; இருவர் காயம்

காஞ்சிபுரம்: Two employees were injured when they threw bottles and attacked them because they did not give them loaned liquor. கடனாக மதுபானம் கொடுக்காததால் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதில் ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜெம் நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளர்கள் 5 பேரும், மேற்பார்வையாளர்கள் இருவர் என மொத்தம் 7 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த டாஸ்மாக் கடையில் இன்று அக்கடியில் தம்மனூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மற்றும் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த தேவராஜன் ஆகிய விற்பனையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்பகுதியில் இன்று ஒரு துக்க நிகழ்வு காரணமாக மதுபான கடையில் ஏராளமானோர் மது வாங்க குவிந்திருந்தனர்.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமன், பிரதாப் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூவரும் மதுபானக் கடையில் கடனாக மதுபானம் கேட்டுள்ளனர். ஆனால் ஊழியர்கள் கடனாக கொடுக்காததால், ஆத்திரமடைந்த சுமன் மற்றும் பிரதாப் அங்கிருந்த காலி பாட்டில்களை எடுத்து ஊழியர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஊழியர்கள் இருவருக்கும் பலத்த காயமடைந்தனர். முனுசாமி என்பவருக்கு தலையிலும் , தேவராஜ் என்பவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டு 4 தையல் போடப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காஞ்சி தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குல் சம்பவம் எதிரொலியாக காஞ்சி நகரில் செயல்பட்டு வரும் கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த பிறகே வழக்கம் போல் கடைகள் இயங்கியது.

திருவள்ளூர் அருகே மினி வேன் மோதி ஓட்டுநர் பலி
திருவள்ளூரை மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபதி (35), ஓட்டுநர் பணி செய்து வருபவர் . நேற்று காலை சிவபதி இருசக்கர வாகனத்தில் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.கோவிந்தமேடு ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சென்றபோது எதிரே வேகமாக வந்த மினிவேன் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் சிவபதி சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக உயிர்ழந்தார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மப்பேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மினி வேன் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.