Aavin’s Diwali sweet sale Rs. 200 crore target : தீபாவளிக்கு ரூ. 200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனைக்கு இலக்கு: அமைச்சர் நாசர்

சென்னை: Aavin’s Diwali sweet sale Rs. 200 crore target, Minister Nasser : தீபாவளிக்கு ரூ. 200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவின் மூலம் 6 வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. நிகழாண்டு 9 வகையான இனிப்புகள் அறிமுகம் (Introducing 9 types of sweets this year) செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆவின் பொருள்கள் ரூ. 82.24 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ. 200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். இலக்கை தொடுவதற்கான விற்பனை யுக்திகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டைப் போல நிகழாண்டும் கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை அலுவலகங்கள், அரசு ஊழியர்களின் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகள் வாங்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ் ஆவின் பொருள்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அம்பத்தூர் மட்டுமல்லாமல் திருவள்ளுவர், கோயம்பத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை (Thiruvalluvar, Coimbatore, Villupuram, Trichy, Salem, Namakkal, Madurai) உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் விற்பனைக் கிளைகள் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்பு விற்பனைக்கு தொலை பேசி மூலம் பதிவு செய்தால், இலவசமாக இல்லத்திற்கே கொண்டு வந்து விநியோகம் செய்யப்படும் என்றார்.

தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்படும் 9 வகையான சிறப்பு இனிப்புகள் விலை பட்டியல் (Special Sweets Price List) விவரம்:

  1. நெய் பாதுஷா 250 கிராம் – ரூ. 190.
  2. ஸ்பெஷல் நட்ஸ் அல்வா 250 கிராம் – 190.
  3. மோதி பாக் 250 கிராம் – 180.
  4. காஜு பிஸ்தா ரோல் 250 கிராம் – ரூ. 320.
  5. திருநெல்வேலி அல்வா 250 கிராம் – ரூ. 125.
  6. காஜு கட்லி 250 கிராம் – ரூ. 260.
  7. கருப்பட்டி அல்வா 250 கிராம் – ரூ. 170.
  8. வகைப்படுத்தப்பட்ட இனிப்பு 500 கிராம் – ரூ. 450.
  9. ஆவின் மிக்சர் 200 கிராம் – ரூ. 100.