Prime Minister Modi’s Speeches : பிரதமர் மோடியின் உரைகளின் தொகுப்பு நூல்: இன்று வெளியிடுகிறார் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு

புது டெல்லி: Collection of Prime Minister Modi’s Speeches: Venkaiah Naidu Releases Today : பாஜக அரசின் இலக்கும் , பிரதமர் நரேந்திர மோடியின் பிரபல வார்த்தைகளான அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும் , அனைவரின் நம்பிக்கையுடன் ‘ என்கிற தலைப்பில் அவரது உரை கள் அடங்கிய நூலின் முதல் பாகத்தை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று வெளியிடுகிறார்.

தில்லி ஆகாசவாணி பவனில் உள்ள கலையரங்கில் (Delhi Aagasvani Bhawan theater) காலை 11 மணியளவில் நடைபெறும் உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவை மத்திய செய்தி , ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய செய்தி , ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்குர் முன்னிலையில் நடைபெ றும் இந்நிகழ்வில், கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் . முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம் . வெங்கையா நாயுடு இந்த நூலை வெளியிட்டுப் உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய செய்தி , ஒலிபரப்பு அமைச்சக செய லர் அபூர்வா சந்திரா மற்றும் அரசு ஊடகப் பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நூலில் கடந்த 2019 மே மாதத்தில் இருந்து 2020 மே மாதம் வரை பிரதமர் மோடியின் 86 உரைகள் இடம் பெற்றுள்ளதாக (86 speeches of Prime Minister Modi have been included) மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் கூறியிருப்பதாவது : புதிய இந்தியாவை உருவாக்குவதில் 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கை, அபிலாஷைகளை அவர்களின் பங்களிப்புடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உறுதிப்பாடாக இருப்பது இந்த உரைகள். தற்சார்பு இந்திய பொருளாதாரம் . ஆட்சியில் குடிமக்களுக்கு முதல் உரிமை , கரோனாவிற்கு எதிரான போராட்டம். வளரும் இந்தியா, வெளியுறவுக் கொள்கை, ஜெய் கிஸான், டெக் இந்திய – புதிய இந்தியா, பசுமை இந்தியா -தூய்மை இந்தியா, கலாசார பாரம்பரியத்துடன் நவீன இந்தியா உள்ளிட்ட 10 கருப்பொருளாக பிரிக்கப்பட்ட இந்த உரைகள் புதிய இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன.

தன்னம்பிக்கை மீள்தன்மை மற்றும் சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் திறன் கொண்ட புதிய இந்தியா (A new India capable of turning challenges into opportunities) பற்றிய பிரதமரின் பார்வையை இந்தப் புத்தகம் சித்தரிக்கிறது. தலைமைப் பண்பு, தொலைநோக்கு சிந்தனை. பார்வை ஆகியவற்றைத் தனது வேறுபட்ட பேச்சுத் திறன் மூலம் மக்களுடன் இணைக்கும் சிறந்த தகவல் தொடர்புத் திறன்களை பிரதமர் ஒருங்ணைக்கிறார். அவரது வார்த்தைகள் இந்த நூலிலும் பிரதிபலிக்கிறது. நாங்கள் அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும் என்ற மந்திரத்துடன் ஆரம்பித்தோம். ஆனால் 5 ஆண்டு நிலையான அர்ப்பணிப்புடன், அதற்கு மற்றொரு அற்புதமான சொல்லை மக்கள் சேர்ந்துள்ளனர். அதானவது அனைவரின் நம்பிக்கையுடன் எனக் குறிப்பிடும் உரைகள் நூலில் உள்ளன.