Teacher burns a boy’s genitals : சிறுவன் கால்சட்டையில் சிறுநீர் கழித்ததற்காக அவனது பிறப்பு உறுப்பை ஆசிரியர் ஒருவர் தீக்குச்சியால் சுட்டுள்ளார்

Urinating in his pants : சிக்கநாயக்கனஹள்ளி அங்கன்வாடியில் பயின்று வரும் மூன்று வயது சிறுவன், தனது கால்சட்டையில் அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான்.

தும்கூர்: teacher burns a boy’s genitals : சிறு குழந்தைகள் பேன்ட்டில் சிறுநீர் கழிப்பது புதிதல்ல. சிறுவயதில் எல்லோரும் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். அதனால் அதை பெரிய குற்றமாக யாரும் நினைப்பதில்லை. ஆனால், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில், மூன்று வயது சிறுவனுக்கு, கால்சட்டையில் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர், அவருக்கு விசித்திரமான தண்டனை வழங்கியுள்ளார்.

சிக்கநாயக்கனஹள்ளி அங்கன்வாடியில் (Chikkanayakanahalli Anganwadi) பயின்று வரும் மூன்று வயது சிறுவன் தனது கால்சட்டையில் தொடர்ந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தானாம். இதனால் அங்கன்வாடி ஆசிரியை மற்றும் அங்கு பணி புரியும் உதவியாளருக்கு சிறுவன் மீது கோபம் ஏற்பட்டது. சிறுவன் கால்சட்டைக்குள் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க திட்டமிட்ட அங்கன்வாடி ஆசிரியை மற்றும் உதவியாளரும் சிறுவனின் பிறப்புறுப்பை தீக்குச்சியால் சுட்டுள்ளார்.

சிறுவனின் பிறப்பு உறுப்பு மற்றும் தொடையில் தீக்காயங்கள் (Burns on the boy’s genitalia and thigh) இருந்ததை பெற்றோர் கவனித்ததையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சிக்கநாயக்கனஹள்ளி கிராமத்திற்கு வந்துள்ளனர். ஆசிரியர் மற்றும் உதவியாளரின் வாக்குமூலங்களை பதிவு செய்த அதிகாரிகள், சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிக்கநாயக்கனஹள்ளி அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் உதவியாளருக்கு வட்ட‌ மகளிர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் (The District Women and Child Welfare Officer has sent a notice). சிக்கநாயக்கனஹள்ளி காவல் நிலைய சரகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவனின் பிறப்பு உறுப்பில் தீக்குச்சியால் சுட்ட சம்பவம் மாநில அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர்களை ஆசிரியர்கள் உள்ளிட்ட யாரும் அடிக்கவோ, தாக்கவோ கூடாது என்று சட்டவிதிகள் உள்ள நிலையில், ஒரு சில ஆசிரியர்கள் சட்டவிதிகளை பின்பற்றாமல் மாணவர்கள் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் (Students have a habit of beating). இதில் ஒரு சிலது மட்டும் வெளிச்சத்திற்கு வருகின்றன. பல சம்பவங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் போகின்றன.