leopard trapped in Sathyamangalam: சத்தியமங்கலம் அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை

ஈரோடு: A leopard trapped in a cage near Sathyamangalamசத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி, புதுபீர்கடவு, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அப்குதிகளில் இரவு நேரங்களில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கால்நடைகளை அவ்வப்போது அந்த சிறுத்தை வேட்டையாடி வந்தது. அதிகாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் இருந்தபோது, பொதுமக்களின் சிறுத்தை உலாவருவது தெரியவந்தது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பெரும்பாலோனோர் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.

இதையடுத்து கால்நடைகளை வேட்டியாடி வருவதாலும், மக்களின் அச்சத்தை போக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பவானி சாகர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க புதுபீர் கடவு பகுதியில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கூண்டு வைத்து கடந்த 5 நாட்களாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவில் மீண்டும் இந்த பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டில்இருந்த ஆட்டை சாப்பிட வந்த போது வசமாக கூண்டில் சிக்கியது. இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

அப்போது கூண்டில் சிக்கிய சிறுத்தை 5 வயது ஆண் சிறுத்தை என்று தெரியவந்தது. சிறுத்தை கூண்டில் சிக்கியதையடுத்து சிறுத்தையை வேடிக்கை பார்க்க ஏராளமானபேர் திரண்டனர். அவர்களை சிறுத்தையின் அருகே செல்ல விடாமல் வனத்துறையினர் தடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளவாடியில் சிக்கிய கூண்டில்இருந்து தப்பியது. பின்னர் வனத்துறையினர் போராடி ஒரு வழியாக சிறுத்தையை பிடித்து தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். எனவே இந்த முறை சிறுத்தையை கவனமாக வனத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.

Also Read: Increase in water flow to Mettur dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டதால் புதபீர்கடவு, ராஜன் நகர்,பண்ணாரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தையை தெங்குமரகஹடா அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தெரிந்துகொள்வோம்:
சிறுத்தை (Leopard) பூனைப் பேரினத்தின் உறுப்பினரும் பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும். ஏனையவை சிங்கம், புலி, ஜாகுவார் என்பனவாகும். சிறுத்தைகள் ஒரு காலத்தில் சைபீரியா முதல் தென்னாபிரிக்கா வரையுள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் பரந்திருந்தன. ஆனால் வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அவற்றின் பரம்பல் விரைவாகக் குறைவடைந்துள்ளது. இவை தற்போது உப சகார ஆப்பிரிக்கப் பகுதிகளிலேயே பிரதானமாகக் காணப்படுகின்றன.

Also Read: TN Electricity board : மின் இணைப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் ரத்தானால் கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவு

மேலும் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோசீனா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறியளவில் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பல் மற்றும் தொகை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.