சென்னை: : 8 district schools and colleges holiday announcement tomorrow. மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இது, நாளை காலை வரை தீவிர புயலாக மாறி படிப்படியாக வலுப்பெறும். இந்தப் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும், கரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
தொடர்ந்து இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர்,கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர்,செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



