Insurance of Road Projects: சாலைத் திட்டங்களுக்கான காப்பீட்டுத் தொகை உயர்வு

புதுடெல்லி: Nitin Gadkari said in the Lok Sabha about the increase in the insurance amount for road projects. சாலைத் திட்டங்களுக்கான காப்பீட்டுத் தொகை உயர்வு குறித்து மக்களவையில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில், நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் காப்பீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, திட்ட நிறைவு சான்றிதழ் வழங்கும்வரை ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை சரிகட்ட காப்பீடுகள் அவசியமாகிறது.

பணிகள், தாவரங்கள், எந்திரங்களுக்கான காப்பீடு
ஒப்பந்ததாரரின் உபகரணங்கள், ஆவணக்களுக்கான காப்பீடு
ஒப்பந்ததாரரின் இயலாமைக்கான காப்பீடு
நபர்களின் காயம் மற்றும் சொத்துக்கள் சேதத்திற்கான காப்பீடு

இதற்கிடையே, மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019-ன் 161-வது பிரிவின்படி, மோதிவிட்டு தப்பியோடும் விபத்துக்களில், காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாகவும், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.25,000 லிருந்து ரூ.2,00,000-மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இழப்பீட்டுக்கான உத்தரவை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் ஹிட் அண்ட் ரன் பிரிவின் கீழ் நிகழ்ந்த சாலை விபத்துகளின் மொத்த எண்ணிக்கை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மோதலின் வகை201520162017201820192020
இடித்து விட்டு ஓடு570835594265186698225798752448

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.