Atmanirbhar Bharat Package: தமிழகத்தில் தற்சார்பு இந்தியா தொகுப்பு சலுகைக்கு 2,16,482 நிறுவனங்கள் பதிவு

புதுடெல்லி: The Union Minister of State said that 2,16,482 companies have registered for Self-reliant India package offer in Tamil Nadu. தமிழகத்தில் தற்சார்பு இந்தியா தொகுப்பு சலுகைக்கு 2,16,482 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் மத்திய குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை, இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா எழுத்து மூலம் அளித்த பதிலில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தற்சார்பு இந்தியா தொகுப்பு சலுகையின் கீழ் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் கோடி பிணை இல்லாத கடன்கள்.
எம்எஸ்எம்இ தன்னிறைவு இந்தியா நிதி மூலம் ரூ.50,000 கோடி பங்கு முதலீடு அளித்தல்.
எம்எஸ்எம்இ-க்களுக்கான புதிய மாற்றியமைக்கப்பட்ட விதிமுறை
ரூ.200 கோடி வரையிலான கொள்முதலுக்கு உலக டெண்டர்கள் கிடையாது
எளிதாக தொழில் நடத்தும் வகையில் எம்எஸ்எம்இ-க்களுக்கான உதயம் பதிவு.

எம்எஸ்எம்இ-க்களை குறைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு இ நிர்வாக நடவடிக்கைகளுக்காக 2020 ஜூன் மாதம் சாம்பியன்ஸ் தளம் தொடங்கப்பட்டது.

உதயம் தளத்தின் மூலம் இதுவரை 15,07,128 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில் 43,15,759 பெண்கள் பணியாற்றுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை 2,16,482 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில், 11,13,645 பெண்கள் வேலை செய்கின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,942 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதில் 5,500 பெண்கள் வேலை செய்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த உற்பத்தித் துறையில் தொடங்கப்பட்டதில் இருந்து இன்றுவரை உத்யம் போர்ட்டலின்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மாநில வாரியான மொத்த எண்ணிக்கை மற்றும் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை:

வரிசை எண்மாநிலம்பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கைபணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை
1ஆந்திரப் பிரதேசம்29957113034
2அருணாச்சல பிரதேசம்5133574
3அஸ்ஸாம்2062559894
4பீகார்4352091765
5சத்தீஸ்கர்974719390
6GOA17252543
7குஜராத்192707266283
8ஹரியானா44392125760
9ஹிமாச்சல் பிரதேசம்47689189
10ஜார்கண்ட்1545571980
11கர்நாடகா84025448112
12கேரளா31566101045
13மத்திய பிரதேசம்4237072324
14மகாராஷ்டிரா247318464076
15மணிப்பூர்1203366340
16மேகாலயா6731791
17மிசோரம்10403472
18நாகலாந்து13746251
19ஒடிஷா1817275838
20பஞ்சாப்61937116700
21ராஜஸ்தான்125309144950
22சிக்கிம்140427
23தமிழ்நாடு2164821113645
24தெலுங்கானா33055155166
25திரிபுரா10455304
26உத்தர பிரதேசம்119484294364
27உத்தரகாண்ட்919624054
28மேற்கு வங்காளம்47199246115
29அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்10471279
30சண்டிகர்18903665
31தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & தமன் மற்றும் DIU10713753
32டெல்லி53000126079
33ஜம்மு மற்றும் காஷ்மீர்3174870561
34லடாக்5671471
35லட்சத்தீவு3665
36புதுச்சேரி19425500
 மொத்தம்:-15,07,12843,15,759