60% reduction in Toll Fee in Tamil Nadu: தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் 60% குறைகிறது

புதுடெல்லி: 60% reduction in Toll Fee in Tamil Nadu. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளில் 60 சதவீதம் வரை கட்டணத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசின் சார்பாக சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சுங்கக் கட்டணத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில், மத்திய அரசு வசூல் செய்து வருகிறது. சமீப நாட்களாக, வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கி எளிதாக கட்டணங்களை செலுத்த ‘பாஸ்ட் டேக்’ போன்ற பல்வேறு டிஜிட்டல் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த கட்டணத்தை அரசு குறைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 9 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 60% வரை குறைக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.