India Vs new Zealand T20: நாளை நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி, இந்தியா தொடரில் முன்னிலை பெறும் என எதிர்பார்ப்பு

வெலிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 2 வது போட்டிக்கு ரசிகர்க‌ளிடம் ஆர்வம்.

மவுண்ட் மவுங்கானுய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2 வது போட்டி (India Vs New Zealand T20) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடக்கிறது. வெலிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், 2 வது போட்டிக்கு ரசிகர்க‌ளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இளம் வீரர்களைக் கொண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி (Indian team led by Hardik Pandya), நியூசிலாந்தை வீழ்த்தும் நம்பிக்கையில் உள்ளது. டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க பெரிய களமாக உள்ளது.

2024 டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆயத்தத்தை இப்போதே தொடங்கிவிட்ட பிசிசிஐ, முதல் பாகத்துக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மாற்றியுள்ளது. வரும் ஜனவரி மாதம் இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் டெஸ்ட், ஒரு நாள் அணி மற்றும் டி20 அணிகளுக்கு தனித்தனி கேப்டன்களை பிசிசிஐ நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது (BCCI is reportedly looking to appoint separate captains for the Test, ODI and T20 teams).

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, ரோஹித் சர்மா அனைத்து வடிவங்களிலும் கேப்டன் பதவியை இழப்பார். அதே நேரத்தில் துணை கேப்டன் கேஎல் ராகுல் அல்லது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (KL Rahul or wicket keeper Rishabh Pant) டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள்.

India Vs New Zealand T20: நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன் அணியில் விளையாட வாய்ப்பு உள்ளவர்களின் விவரம் கீழே:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷதீப் சிங், ஹர்ஷல் படேல்/முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார்.

இந்தியா Vs நியூசிலாந்து இரண்டாவது டி20
போட்டி ஆரம்பம்: மதியம் 12.00 (இந்திய நேரம்)
இடம்: பே ஓவல், மவுன்ட் மவுங்கானுய்
நேரடி ஸ்ட்ரீமிங்: அமேசான் பிரைம் வீடியோ