60 elephants camp near Hosur: ஓசூர் அருகே 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்

ஓசூர்: As more than 60 elephants have camped near Hosur, the forest department is engaged in the task of driving them away. ஓசூர் அருகே 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் சுமார் 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. ஆண்டு தோறும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வானகோட்டம் உட்பட்ட மாநில எல்லையான ஜவளகிரி வனப்பகுதி வழியாக தமிழகத்திற்குள் நுழைவது வழக்கம். அதன்படி, தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் சானமாவு, ஊடேதுர்கம், நொகனூர், தேன்கனிக்கோட்டை, உரிகம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக பிரிந்து தஞ்சமடைந்துள்ளது.

இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நுழைந்து, அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களான ராகி, நெல், வாழை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி, நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறியது.

இந்த யானைகள் நேற்று அதிகாலை நாகமங்கலம் ஏரி பகுதியில் சுற்றித்திரிந்தன. நாகமங்கலத்தில் உள்ள ஏரியில் தஞ்சம் அடைந்துள்ள யானைகள் குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஏரியிலிருந்த யானைகளை பட்டாசு வெடித்து மீண்டும் ஊடேதுர்கம் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.