water released from Mettur dam : நீர் வரத்து அதிகரிப்பு, மேட்டூர் அணையிலிருந்தும் 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

சேலம் : 50 thousand cubic feet of water is also released from Mettur dam : தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்தும் 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடகம், கேரளா மாநிலங்களில் (states of Karnataka and Kerala) உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்), கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து நொடிக்கு 19,795 கன அடி உபரிநீர், கபினி அணையிலிருந்து 8,583 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது மட்டுமின்றி கர்நாடகம், தமிழகத்தின் காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பிலிகுண்டுலு வழியாக ஒகனேக்கல்லுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகனேக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது.

இதனையடுத்து ஒகேன்னக்கல்லில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை அழைத்துச் செல்லவும், மீன் பிடிக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்து (Dharmapuri District Collector K. Shanti has imposed a ban) உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒகனேக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு 46 வது நாளாக மீண்டும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒகனேக்கல்லுக்கு வரும் நீர்வர‌த்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நிரம்பியுள்ள நிலையில், அணையிலிருந்து நொடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து, ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், கடலூர் (Erode, Namakkal, Karur, Ariyalur, Trichy, Thanjavur, Tiruvarur, Mayiladuthurai, Nagapattinam, Cuddalore) உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்கள் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும் அணைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது மேட்டூர் அணையில் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது.