Kallakurichi student death case: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு: கைது செய்யப்பட்ட‌ 5 பேருக்கு ஜாமீன்

சென்னை: Kallakurichi student death case: 5 arrested get bailகள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி (Private school student Shri Mathi)உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மாணவியில் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீஸார், பள்ளியில் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கைது செய்யப்பட்ட 5 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்(All 5 persons filed a bail petition in Madras High Court). மனுவில் தங்கள் மீதான குற்றச்சாட்டில் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. பள்ளியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 38 நாள்களாக சிறையில் இருந்து வரும் நிலையில், இன்னும் தங்களை நீதிமன்றம் காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தங்களுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் என்ன தவறு செய்தனர் என்ற விவரங்களை தெரிவிக்க காவல்துறை, வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்த வழக்கில் மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார். அதன்படி, வெள்ளிக்கிழமை இது தொர்பான விசாரணை நடைபெற்றது. விசாரணையில், பள்ளி தாளாளர், செயலாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் 2 பேர் உள்பட 5 பேருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் (The judge granted bail to all 5 people).