26 Driverless Trains for CMRCL: சென்னைக்கு ஓட்டுநர் இல்லாத 26 மெட்ரோ ரயில்: ரூ.946.92 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: Alstom to make 26 driverless trains for Chennai Metro Rail: சென்னையில் ஓட்டுநரை இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (Chennai Metro Rail Limited) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்து திட்டமாகும். இத்திட்டம் “சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை” ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் ரயில்கள் தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இதில் 54.1 கிலோமீட்டர் (33.6 மைல்) நீளம் கொண்ட இரண்டு வழித்தடங்கள் உள்ளன. சென்னை மெட்ரோ, தில்லி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ மற்றும் கொல்கத்தா மெட்ரோ ஆகியவற்றிற்கு பின், இந்தியாவில் 4வது பெரிய மெட்ரோ அமைப்பாகும்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), மத்திய, மாநில அரசுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை ரயில் சேவைகள் மாறுபடும். இந்த ரயில் சேவையானது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்கி வந்தன. கடந்த மார்ச் 17ம் தேதி முதல் பயணிகளின் வசதிக்காக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே கடந்த 2015 ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியன்று அன்றைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை மெட்ரோவின் முதல் ஓட்டுநர் என்ற பெருமையை ப்ரீத்தி என்ற பெண் ஓட்டுநர் பெற்றார்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ரூ.946.92 கோடி மதிப்பிலான 26 மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில்களை (driverless trains ) தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் (Alstom Transport India Limited) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ரயில்கள் கட்டம்-2 மெட்ரோ வழித்தடங்களில் பயன்படுத்தப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெடுக்காக 52 ரயில்கள் அனைத்தையும் கட்டம்-1 இல் உருவாக்கிய அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் Alstom, 2024 ஆம் ஆண்டில் முதல் ஓட்டுநர் இல்லா ரயிலை வழங்க வேண்டும். அதன்பிறகு ஒரு வருடத்திற்குள் மீதமுள்ள ரயில்கள் டெலிவரி செய்யப்படும். மொத்த நிறைவு நேரம் சுமார் 40 மாதங்கள்.

ஒப்பந்தத்தின் நோக்கம் ஓட்டுநர் இல்லாத ரயில்களை வழங்குதல் (UTO- Unattended Train operation) ஆகியவை அடங்கும், இதில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, நிலையான கேஜ் மெட்ரோ ரோலிங் ஸ்டாக்கை இயக்குதல், பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு ஆகியவை அடங்கும்.

சென்னையில் ஓட்டுனர் இல்லாமல் மூன்று பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில் விரைவில் இயங்கும் என்பது சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.